தேசிய பங்கு சந்தையில் காஸ் 'பியூச்சர்ஸ்' வர்த்தகம்

தேசிய பங்கு சந்தையான ‘என்.எஸ்.இ.,’ உள்நாட்டு இயற்கை எரிவாயு விலையை அடிப்படையாக கொண்ட புதிய ‘டெரிவேட்டிவ்ஸ்’ வர்த்தகத்தை, ‘இந்தியன் காஸ் எக்ஸ்சேஞ்ச்’ (ஐ.ஜி.எக்ஸ்.,) உடன் இணைந்து துவங்குகிறது. இதற்கான அனுமதியை, ‘செபி’ தற்போது வழங்கியுள்ளது.

‘ஐ.ஜி.எக்ஸ்.,’ தளத்தில் நடைபெறும் உண்மையான வர்த்தக விலையை அடிப்படையாக கொண்ட ‘காஸ் இண்டெக்ஸ் ஆப் இந்தியா’ (ஜி.ஐ.எக்ஸ்.ஐ.,) எனும் குறியீட்டின்படி, என்.எஸ்.இ.,யில் ‘பியூச்சர்ஸ்’ ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம்.

இதற்கான அதிகாரபூர்வ துவக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் என என்.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.

இதுவரை சர்வதேச சந்தை விலையை சார்ந்திருந்த நிலை மாறி, இனி ‘ஐ.ஜி.எக்ஸ்.,’ தரவுகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எக்ஸ்.ஐ.,’ இயங்கும். உள்நாட்டு எரிவாயு சந்தையை உலக தரத்துக்கு உயர்த்துவது, வர்த்தகத்தை எளிதாக்கி அதிகப்படியான முதலீட்டாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பது, இந்திய தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
— ஸ்ரீராம் கிருஷ்ணன்,
முதன்மை வணிக மேம்பாட்டு அதிகாரி என்.எஸ்.இ.,

Source link