குறைந்தது வேலையின்மை

நாட்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், படித்தவர்களுக்கான வேலையின்மை விகிதம், கடந்தாண்டு 6.50 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய 2024ல், ஏழு சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவுகளிலும் வருமானம் அதிகரித்துள்ள போதிலும், பெண்களுக்கான ஊதியத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுயதொழில் மற்றும் மாத சம்பளம் பெறும் பணிகளில் ஆண்களை விட பெண்களின் ஊதிய வளர்ச்சி விகிதம் வேகமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பிரிவு வேலையின்மை விகிதம் 2024 2025 படித்தவர்கள் 7.00 6.50 இளைஞர்கள் 10.30 9.90 நகர்ப்புறம் (ஆண்கள்) 4.40 4.20 நகர்ப்புறம் (பெண்கள்) 6.70 6.40 கிராமப்புறம் (ஆண்கள்) 2.80 2.60 கிராமப்புறம் (பெண்கள்) 1.80 1.80

துறைவாரியான பணியாளர் விகிதம் துறை 2024 2025 விவசாயம் 44.80 43.00 உற்பத்தி 11.60 12.10 கட்டுமானம் 12.30 12.00 விருந்தோம்பல் 12.50 12.90 போக்குவரத்து 5.80 5.80 பிற சேவைகள் 12.20 13.10 மின்சாரம் 0.60 0.70 சுரங்கம் 0.30 0.30

Source link