வெட்டி விளம்பரம் மட்டும்தான்..!! இதையெல்லாம் தடுக்க மாட்டீங்களா..? போராட்டம் வெடிக்கும்..!! CM விஜய்க்கு பாஜக எச்சரிக்கை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நல்லூரான்பட்டியில், மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மானிய உர மூட்டைகளை வேறு சாக்குப் பைகளுக்கு மாற்றி, வணிக நோக்கில் விற்பனை செய்யும் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்டுதோறும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் மானிய விலையில் உர மூட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.71 லட்சம் கோடியும், நடப்பு காரிஃப் பருவத்திற்கு மட்டும் தனியாக ரூ.41,534 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டைகளின் விலை சுமார் ரூ. 250 முதல் ரூ. 300 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற சட்டவிரோத பதுக்கல் காரணமாக, இதே உர மூட்டைகளை சுமார் ரூ.1,000 முதல் ரூ.1500 வரை கொடுத்து விவசாயிகள் வெளியில் வாங்க வேண்டிவரும். இந்த மிகப்பெரிய ஊழல் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது, கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஜூலை மாதத்தில், கோவை திருமலையாம்பாளையம் அருகேயுள்ள குடோனில் இதே போன்ற மானிய உர மூட்டைகள், டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகிய போதே, தற்போதைய தவெக அரசை நாம் எச்சரித்து இருந்தோம்.

ஆனால், வெட்டி விளம்பரங்கள் செய்வதிலும், விதவிதமான ரீல்ஸ்கள் எடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், இதை துளியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, இனியும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் காலம் தாழ்த்தினால், பாஜகவின் விவசாய அணி சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்.

இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க..!! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் கடும் கண்டனம்..!!

Source link