ஜேசனின் சிக்மா படத்தை பார்த்த முதல் ஆள் யார் தெரியுமா?: அது விஜய்யோ, சங்கீதாவோ இல்ல, T…

சிக்மா விழா: முதல்வர் ஜோசப் விஜய் , சங்கீதா சொர்ணலிங்கம் தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் ப்ரீ லான்ச் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஜேசனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அவரும் பதில் அளித்தார்.

நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என கேட்டதற்கு, திருமலை என்றார் ஜேசன் சஞ்சய். அப்பா விஜய் நடித்த அந்த படத்தை பார்த்தபோது ஜேசனுக்கு மூன்று வயது. எந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் வந்தது ஜேசன் என்று கேட்டபோது, விஜய் பட பெயரை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ யாரும் என்னை திட்டாதீங்க, சிட்டி ஆஃப் காட் என்கிற பிரேசிலியன் படத்தை சிறு வயதில் பார்த்தபோது ரொம்ப இன்ஸ்பையர் செய்தது என்றார்.

சங்கீதா அம்மா: நீங்கள் இயக்கிய முதல் குறும்படம் என கேட்க pull the trigger என உடனே பதில் அளித்தார் ஜேசன். 2012ம் ஆண்டு அந்த குறும்படத்தை இயக்கியிருக்கிறார். உங்களின் சிக்மா படத்தை முதலில் பார்த்தது யார் என்று கேள்வி வந்ததுமே அப்பா விஜய் தான் வேறு யாரு என பதிலுக்கு கேட்பார் என தளபதியன்ஸ் காத்திருந்தார்கள். ஆனால் ஜேசனோ சிறிது நேரம் யோசித்துவிட்டு என் டைரக்ஷன் டீமை தாண்டி முழு படத்தையும் முதலில் பார்த்தவர் தயாரிப்பாளர் தமிழ்குமரன் சார் என்றார். ஃபைனல் எடிட் முடித்துவிட்டு படத்தை போட்டுக் காட்டுங்க என ரொம்ப நாளாவே அவர் தான் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த அளவுக்கு இன்வால்வ்டான தயாரிப்பாளர் கிடைத்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் ஜேசன். நான் டைரக்டர் ஆகிட்டேன் என யாருக்கு முதலில் போன் போட்டு சொன்னீர்கள் என கேட்க சட்டென்று எங்கம்மா கிட்ட என்று பதில் அளித்தார் குட்டி தளபதி.

அக்டோபரில் ரிலீஸ்: ஜேசன் நடந்து வரும் விதம், பேசுவது எல்லாமே விஜய் மாதிரியே இருக்கிறது என்று முதல்வரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜய் ரத்தம் அவர் மாதிரி தானே இருக்கும். ஜேசனின் முதல் படம் ஜூலை மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது.

ஜூலை 31ம் தேதியை குறித்து வைத்து ரிலீஸ் செய்ய காத்திருந்த நேரத்தில் தான் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. இதையடுத்தே சிக்மா ரிலீஸை அக்டோபர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.அக்டோபர் 2ம் தேதி சிக்மா படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சங்கீதா வருவாரா?: விவாகரத்து வழக்கை ஆகஸ்ட் மாதம் வாபஸ் பெற்றபோதிலும் ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் சங்கீதா கலந்து கொள்ளவில்லை. அதனால் சிக்மா FDFS பார்க்க விஜய்யும், சங்கீதா அண்ணியும் சேர்ந்து வர வேண்டும், அதை கண்குளிர பார்த்து ரசிக்க வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

விஜய்க்கு விவாகரத்து நடந்துவிடுமோ என்று ரசிகர்கள் நினைத்த நேரத்தில் தான் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார் சங்கீதா. முன்னதாக தன் கணவருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போது பிள்ளைகள் ஜேசன், திவ்யாவுக்காக நடந்ததை மறந்து விஜய்யுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார் சங்கீதா என பேசப்படுகிறது.

Source link