முனியம்மா, தன்யா, சாந்தினி: பிக் பாஸ் 10 நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரமே எவிக்ஷன் நடக்குமா என்று இந்த சீசனில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அதற்கு காரணம் கிராண்ட் லான்ச்சில் பிக் பாஸ் செய்த சம்பவம் தான். நீங்கள் தான் சார் போட்டியாளர் என மேடை வரை அழைத்து வந்துவிட்டு கடைசி நேரத்தில் ஆடியன்ஸை வாக்களிக்கச் சொல்லி வாசலோடு சிலரை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்காக மூன்று பேரை நாமினேட் செய்யும் பொறுப்பு கேப்டன் சாதிகாவுக்கு கொடுக்கப்பட்டது. கண்டிப்பா வாயாடி அக்கா முனியம்மாவை சாதிகா நாமினேட் செய்வார் என எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது. முனியம்மா உடன் சேர்த்து தன்யா பல்லத், சாந்தினி தமிழரசனையும் நாமினேட் செய்து வைத்திருக்கிறார் கேப்டன்.
தலைவி சாதிகா: சும்மாவே சாதிகா வாயை திறந்தால் முனியம்மா அக்காவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். இதில் பிக் பாஸ் வீட்டில் ஒன்னும் பெருசா செய்யவில்லை என நாமினேட் வேறு செய்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் அவர். முன்னதாக நீ லீடரா இருக்க லாயக்கே இல்லனு முனியம்மா மட்டும் தான் குமுறிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பிற போட்டியாளர்களும் அதையே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தலைவரை தப்பா தேர்வு செய்துவிட்டோமோ என எங்களுக்கு ஒரு டவுட்டு இருக்கு என ஜாவித் சொல்ல ஷப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்பது மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார் சாதிகா.
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஜனநாயக அறை வைத்தாலும் வைத்தார்கள், அங்கு போட்டியாளர்கள் என்ன கருத்து சொன்னாலும் அதை நிஜத்தில் நடப்பதோடு ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுகிறார்கள் மக்கள். போகிற போக்கை பார்த்தால், போட்டியாளர்களின் கருத்துகளுக்கு பிக் பாஸ் பொறுப்பேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கும் போன்று.
எது எப்படியோ லேடி வாட்டர்மெலன் ஸ்டார் முனியம்மாடேஞ்சர் ஜோனுக்கு வந்துவிட்டார். அப்படியே அவரை வெளியேற்றிவிடுங்க பிக் பாஸ் என பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி எல்லாம் சந்தோஷப்படக் கூடாது மக்களே. இந்த சீசனுக்கான ஸ்லோகனை மாற்றிவிட்டாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸுக்கு பிடித்த ஸ்லோகன் ஆகும். அதனால் இந்த வாரம் முனியம்மா கிளம்ப வாய்ப்பு இருக்காது.
அன்சர் இருக்கிறார்: இதற்கிடையே அன்சர் பாய் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று பரணி ஸ்டைலில் சுவர் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆகிவிட்டார் என்று ஒரு வீடியோ வெளியானது. ஆனால் அது உண்மையாக நடந்தது இல்லை. யாரோ ஏஐ உதவியுடன் உருவாக்கியது. பிக் பாஸ் ஒரு பக்கம் ஏஐ உதவியுடன் ப்ரொமோ வீடியோக்கள் உருவாக்க, பார்வையாளர்கள் மறுபக்கம் அவர்கள் நினைத்தது மாதிரி வீடியோ உருவாக்குகிறார்கள். இது எங்கு போய் முடியப் போகிறதோ?
இந்நிலையில் உடல்நிலை காரணமாக தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டியிருப்பதால் கனத்த இதயத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார் பிளாக் பாண்டி.அவர் கிளம்பியபோது போட்டியாளர்கள் எல்லாம் அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி வழியனுப்பி வைத்தார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
பாண்டி திரும்பி வருவது கடினம் தான் போன்று. அதனால் பாண்டிக்கு பதில் யாரை கொண்டு வரப் போகிறார் பிக் பாஸ் என்பதை பார்க்க மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
Source link
