மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தொடர் தோல்விகளுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்குமா? – will aiadmk stop its political crisis in madurantakam dharapuram byelection on oct 6

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. இதில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் நின்று வெற்றிப்பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாம செய்தார். அதனைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம், விராலிமலை உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்து விட்டு தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.

அவ்வகையில் தமிழகத்தில் 7 தொகுதிகளில் காலியாக உள்ள நிலையில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக தனது கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், IJK தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் தொடர்ந்து வெடிக்கும் மோதல்

அதிமுகவின் பொதுச்செயளாலராக இ.பி.எஸ் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை எந்த இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிப்பெறவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு இ.பி.எஸ் தான் பொறுப்பு என முன்னாள் அமைச்சர் C.V. சண்முகம், S.P. வேலுமணி உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன் இ.பி.எஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் S.P. வேலுமணி அணி vs இ.பி.எஸ் அணி என அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் நிலை ஏற்ப்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்கு பின் இரு அணியினரும் ஒன்றிணைந்தனர். இருந்த போதிலும் C.V. சண்முகம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மேலும் முன்னாள் அன்மைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி எம்.எல். ஏ பதவியை ராஜினமா செய்து தவெகவில் இணைந்தார்.

மீண்டும் மீளுமா அதிமுக

இந்நிலையில் அதிமுக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் சூழலில் முதல்வர் விஜய் கூறியது போல TVK vs DMK எனும் சூழல் மட்டுமே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். அவ்வகையில் கடந்த தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக தனது இருப்பை நிலைநிறுத்த இந்த இடைத்தேர்தலில் மீண்டும் அந்த 2 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டி கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, தனந்து கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்து பழைய நிலைக்கு திரும்புமாம்.

கடந்த தேர்திலில் அதிமுக கூட்டணி வென்ற இடங்கள்

அதிமுக 47 பாமக 4 பாஜக1 அமமுக 1ஆகிய இடங்களை கைப்பற்றியது. இன்றைய சூழலில் அதே கூட்டணியிடன் அதிமுக மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும். அதன் அடிப்படியில் தான் கூட்டணி கட்சி தலைவர்களை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

Source link