ENG vs PAK 3rd Test – பும்ராவின் பெரிய சாதனையை தகர்த்த ஆலி ராபின்சன்: பாக்கி. மீண்டும் சொதப்பல் – ollie robinson is the first player took 100 wickets in below 20 average after ww1 in test format

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறல்கிய பாகிஸ்தான் அணியில், ஓபனர் சைத் அயுப் விக்கெட்டை, ஆலி ராபின்சன் LBW மூலம் எடுத்தார். இந்த விக்கெட் மூலம், ஆலி ராபின் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்தார்.

ஆலி ராபின்சனுக்கு, இது 100ஆவது டெஸ்ட் விக்கெட் ஆகும். மொத்தம், 24 டெஸ்ட் போட்டிகளில் 44 இன்னிங்ஸ் பந்துவீசி 100 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர், 100 விக்கெட்களை எடுத்தபோது, இவரது சராசரி 19.34ஆக மட்டுமே இருந்தது. அதாவது, முதலாம் உலகக் போருக்கு அடுத்து, முதல் 100 டெஸ்ட் விக்கெட்களை, சிறந்த சராசரியில் கைப்பற்றிய பௌலராக ஆலி ராபின்சன் வரலாறு படைத்துள்ளார். இதற்குமுன், இந்த சாதனை, ஜஸ்பரீத் பும்ரா வசம்தான் இருந்தது.

ஜஸ்பரீத் பும்ரா, 19.79 சராசரியில், முதல் 100 விக்கெட்களை எடுத்திருந்தார். இந்த இருவர் மட்டுமே, முதலாம் உலகப் போருக்கு பிறகு, 20 சராசரிக்கும் கீழ் முதல் 100 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ஓபனர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சைம் அயுப் 10 பந்துகளில் ஒரு ரன்னை கூட எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு ஓபனர் அசான் அவைஸ் 20 பந்துகளில் 9 ரன்னைதான் சேர்க்க முடிந்தது. அப்துல்லா சபிக் 16 பந்தில் 3 ரன்னை மட்டும் சேர்த்து அவுட் ஆனார். இப்படி, முதல் மூன்று பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணி, 24/3 என தடுமாறியது.

முதல் மூன்று விக்கெட்களில் இரண்டை ஆலி ராபின்சன் எடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆலி ராபின்சன் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வருகிறார். முதல் 2 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றி அசத்திய ராபின்சன், தற்போது, 3ஆவது போட்டியிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒருவேளை, இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியாது என்ற நிலைமை ஏற்படும். இங்கிலாந்து அணிக்கு, பைனல் வாய்ப்பு உயிர்புடன் இருக்கும்.

சூதாட்ட புகாரில் பாகிஸ்தான் அணி: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இமாம் உல் ஹக், இரண்டு இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வரவில்லை. தசை பிடிப்பு பிரச்சினை எனக் கூறி, பேட்டிங் ஆடவில்லை. இந்நிலையில், அவரது நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்ததால், அவரது செல்போனை பாகிஸ்தான் அணி பாதுகாப்பு குழு ஆலோசனை செய்தது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த முகமது ரிஸ்வானின் செல்போனையும் ஆய்வு செய்ததில், இரண்டிலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் சில சேட்கள் அழைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவருடனும் அதிகமாக தொடர்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட மேலும் 5 வீரர்களையும், மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மாற்றாக 7 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link