Budhaditya Yoga Benefits,அடுத்த 10 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம், புதன்-சூரியன் இருந்து கோடியாதிபதி யோகம்! – kotyadhipati yoga and mercury sun conjunction : these 5 zodiac sign may get financial growth and positive changes in life

செப்டம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய புரட்டாசி மாதம் தொடங்குகிறது. அது மட்டும் இல்லாமல், கன்னி ராசியில் புதன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது, சூரியனும் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. அது மட்டுமில்லாமல் புதன் ஆட்சி பெறுவதால் அங்கு கோடியாதிபதி யோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த யோகம் உருவாகி 5 ராசியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த பத்து நாட்கள் அதிர்ஷ்ட பலனை பெறுவார்கள்.

சூரிய பகவான் கன்னி ராசியில் சந்திக்கக்கூடிய மிகவும் மங்களகரமான புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் இங்கே புதன் ஆட்சி பெற்று வந்திருக்கக் கூடிய பத்ர யோகம் உள்ள நிலையில், சூரியனும் இணைவதால் புதாதித்யா யோகம் உருவாகிறது. அது மட்டுமில்லாமல் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெற்று மாளவ்ய யோக பலனை தருகிறார். இதன் காரணமாக கோடியாதிபதி யோகம் உருவாகிறது. இது போன்ற அற்புத யோகங்கள் காரணமாக 5 ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு பல விதத்தில் நன்மைகளை பெறுவார்கள். இந்த யோகங்கள் காரணமாக உங்களுடைய வேலை தொழிலில் முன்னேற்றமும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய உள்ளனர்.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு இந்த கோடியாதிபதி யோகம் காரணமாக பல விதத்தில் லாபங்களை அடைபீர்கள். குறிப்பாக நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். அதில் கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதும், உங்களுடைய தகவல் தொடர்பு திறன் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் உள்ளிட்ட விஷயங்கள் வெற்றியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உங்களுக்கு கிடைக்கக்கூடிய புதிய பொறுப்புகள் அல்லது முக்கிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடியதாக அமையும். இது வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கிய அம்சமாக இருக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி சார்ந்த நண்பர்களுக்கு புதாதித்திய யோக பலன் உங்களுடைய வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்கை அதிகரிக்கக் கூடும். உங்களுடைய பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். அதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்க்க. முடியும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதோடு முக்கிய பொறுப்புகளை ஏற்று அதை வழிநடத்தக்கூடிய நிலையில் இருப்பீர்கள். பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புக்கள் கிடைக்கலாம். புதிய உத்திகளுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். நிதிநிலை வலுவடையக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமான பலன்களை இந்த யோகம் தரும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மேலும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்ற விஷயங்களை மேலதிகாரிகளிடம் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த உங்களுடைய பணிகள் வேகம் அடையும். தொழில் முனைவோருக்கு சாதகமான காலமாகவும், புதிய தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய வருமானத்தை சரியான விதத்தில் பயன்படுத்துவதால் அதை பெருக்க முடியும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதாதித்யா யோகம் உங்களுடைய தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளை உருவாக்க உதவும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் மூத்தவர்களின் வழிகாட்டுதல், கடினமான அல்லது முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிக்க உதவும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகளுக்கு ஏற்ற அற்புத பலனை பெற்றிடுவீர்கள். இது உங்களுடைய நிதி விவகாரங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதே சமயம் நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த ‘புதாதித்ய ராஜ யோகம்’ நிதி ரீதியாகச் சாதகமான பலன்களைத் தரக்கூடும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய வணிகம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள், கூட்டணிகள் முன்னேற்றத்திற்கான வலிமையை தரும். இந்த காலகட்டத்தில் அவசர முடிவுகளை தவிர்த்து, சரியான திட்டமிடலுடன் சேமிப்பு மற்றும் முதலீடு விஷயங்களில் கவனம் செலுத்தவும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் முக்கிய முடியும் செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

குறிப்பு: இங்கே வழங்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் தீர்வுகள் ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவற்றை நம்பிக்கை மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ளவும். தனிப்பட்ட ஆலோசனை மற்றும் முழுமையான தகவல்களுக்கு ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.

Source link