‘பான் கார்டு’ பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

மேலும் ‘பான் கார்டு’ விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இனி 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.

ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், அதில் பிறந்த தேதி அல்லது பெயரை மாற்ற விரும்பினால், இனி கட்டாயம் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளைக் கொடுத்துப் பல பான் கார்டுகளைப் பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என வருமான வரித்துறை எதிர்பார்க்கிறது.

Source link