விமர்சங்களுக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை; CPM நிலைப்பாடு என்ன? – latha mla explains the stand of cpm about new secretariat at pattinapakkam

தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகப் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுமெனச் சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ரமதாஸ்,”பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல். எனவே, தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும் சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.” எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக எம்பி இன்பதுரை உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இதற்குக் கடும் எதிர்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பட்டினப்பகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வர் அலுவலகம் மாற்றமா? காரணம் என்ன?

புதிய தலைமைச் செயலகம் – CPM நிலைப்பாடு என்ன?

இதுகுறித்து CPM கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதாவை தமிழ் சமயத்தில் இருந்து தொடர்பு கொண்டோம். அப்போது பேசிய அவர், தற்போது உள்ள தலைமை செயலகத்தில் இடம் பற்றாக்குறையால் சில நெருக்கடிகள் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அதே சமயம் இன்றை தமிழக அரசின் பொருளாதார நிலை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

முன்னதாகத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் விவசாகளின் கடன் முழுமையாக ரத்துச் செய்யப்படும் எனக் கூறப்பபட்டிருந்தது. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை இதனால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலார்கள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வுதியம் நிலுவையில் உள்ள நிலையில், அரசு இது போன்று மக்கள் பணத்தைச் செலவு செய்வது தேவையானதா என்பதே எங்ளது கேள்வி எனத் தெரிவித்தார்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் – தவெகவிற்கு ஆதரவு அளிக்குமா CPM?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக இன்று தவெக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் CPM பங்கேற்காது என நேற்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த எம்எல்ஏ லதா, இதுவரை தவெக கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை. வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்து வருகிறோம். மேலும் வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது எனக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கூடியே முடிவெடுக்கப்படும் எனவும், அதுவே எங்கள் நிலைப்பாடாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் CPM செயற்குழு கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

Source link