நமது நிருபர்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்தன. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. 2 மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோ பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. மனடோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
