SA vs NAM ODI – களமிறங்கிய முதல் போட்டியிலேயே, 150 அடித்த தென்னாப்பிரிக்க வீரர்: வரலாற்று சாதனை – south africa team opener jordan hermann scored 150 runs and created record vs namibia 1st odi

நமீபியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஓபனர் ஜோர்டன் ஹெர்மன் அறிமுக வீரராக இருந்ததால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், இவர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அபாரமாக விளையாடினார்.

மொத்தம, 126 பந்துகளை எதிர்கொண்ட ஹெர்மன் அதில் 17 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 150 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம், தென்னாப்பிரிக்க ஒருநாள் அணிக்கு, அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்குமுன், 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 10ஆம் தேதி, சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிராக மேத்யூ பிரிட்ஸ்கி 148 பந்துகளில் 150 ரன்களை அடித்திருந்தார். தற்போது, இருவரும் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர்.

2010ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கோலின் இங்கிரம் 124 ரன்களையும், 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 102 ரன்களையும், 2017ஆம் ஆண்டில் கெய்னோ குன் 83* ரன்களையும் அடித்து, அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

ரன் குவிப்பு: மற்றொரு ஓபனர் குன்னோர் 19 பந்துகளில் 10 ரன்னை மட்டும் சேர்த்த நிலையில், டோனி டி ஜோர்ஷி 84 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 72 ரன்களை குவித்தார். மேலும், டிவோல்ட் பிரேவிஸ் 33 (28), கர்பின் பாஷ் 39 (24) ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 348/6 ரன்களை குவித்தது.

நமீபியா அணியில், ருபின் ட்ரம்பில்மேன் 10 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து, 349 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கியுள்ள நமீபியா அணி, 24 ஓவர்களில் 95/4 ரன்களை எடுத்து விளையாடி வரும் நிலையில், மழை பெய்து வருகிறது. நமீபியா அணி, இனி கம்பேக் கொடுத்து வெல்வது மிக மிக கடினமாகும்.

இதற்குமுன், முத்தரப்பு டி20 தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நமீபியா அணி அபாரமாக செயல்பட்டது. இந்த முத்தரப்பு டி20 தொடரில், நமீபியா அணி, 163/9 ரன்களை அடித்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 145/9 ரன்களை மட்டும் அடித்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்து, மற்றொரு லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 228/4 ரன்களை அடித்த நிலையில், நமீபியா அணி, 20 ஓவர்களில் 217/3 ரன்களை சேர்த்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படி இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு, நமீபியா அணி டப் கொடுத்ததால், ஒருநாள் தொடரில் நமீபியா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி, அபார வெற்றியைப் பெறும் நிலையில் இருக்கிறது.

Source link