தெலுங்கானாவில் ஒரே ஆண்டில் ரூ.40,209 கோடி மது விற்பனை

மதுபான கடை விண்ணப்பம் மூலம் ரூ.2,869 கோடியும், கடை வாடகை கட்டணம் மூலம் ரூ.1,771 கோடியும், 1214 மதுபான பார்கள் மூலம் ரூ.549 கோடியும் வருவாய் கிடைத்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2,700 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது. 382.91 லட்சம் பெட்டி மதுபாட்டில்களும், 387.34 லட்சம் பெட்டி பீர்பாட்டில்களும் விற்பனையானது. கடந்த டிசம்பர் மாதம் அதிகபட்சமாக ரூ.5,051 கோடிக்கும், குறைந்தபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் ரூ.2,709 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link