“தம்பி விஜய் என் தாடை உடைந்தது உண்மை தான்..ஆனா..” மிசா கொடுமை குறித்து காலையிலே உருக்கமாக வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்! – misa prison torture recalled by stalin amid controversy over vijay assembly gesture

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அதற்கு முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

அப்போது திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து பேசிய விஜய், “எதற்கெடுத்தாலும் திமுகவினர் மிசா , மிசா என்கிறார்கள். மிசாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன்போது விஜய் தனது தாடையில் கையை வைத்து செய்த சைகை அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் சைகை குறித்து எழுந்த கேள்வி

விஜய்யின் இந்த சைகை, மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்ட சம்பவத்தை கேலி செய்யும் வகையில் இருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகமும் விமர்சனம் செய்திருந்தார். முதல்வர் ஒருவர் சட்டப்பேரவையில் இவ்வாறு சைகை செய்வது கண்ணியமான செயல் அல்ல என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வீட்டுக்கு வந்தபோது Sorry கேட்டீங்களே”

அந்த காணொளியில் பேசிய ஸ்டாலின், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தனது வீட்டுக்கு தன்னை சந்திக்க வந்ததை நினைவுகூர்ந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை கடுமையாக விமர்சித்ததற்காக அப்போது விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கு தான் “பரவாயில்லை பிரதர். ஆனால் நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர். இனிமேல் யாரைப் பற்றி பேசும்போதும் கொஞ்சம் கண்ணியத்துடன் பேசுங்கள்” என்று கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.அந்த அறிவுரையை விஜய் மறந்துவிட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனது சிறை வரலாறு இருப்பதால் பேசுகிறேன்”

மேலும், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சால் தமிழக மக்களிடமும் திமுகவினரிடமும் கோபமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். மிசா காலத்தில் தான் சிறையில் இருந்த வரலாறு இருப்பதால் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது நடைபெற்ற கொடுமைகளை நினைவுகூர்ந்த ஸ்டாலின், எமர்ஜென்சிக்கு எதிராக அப்போதைய முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்ததை தொடர்ந்து, தன்னை கைது செய்ய காவல்துறையினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்ததாக தெரிவித்தார்.

“மிசாவில் சிறை வைக்கப்பட்டபோதுதான் தாடை உடைந்தது”

மிசா கால சிறை அனுபவங்களை விவரித்த ஸ்டாலின், மிகவும் மோசமான சூழலில் தான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், காவல்துறையினரின் தாக்குதலுக்கு தான் உள்ளானதாகவும் கூறினார்.

தன்னை பாதுகாக்கும் வகையில் அடிபட்ட தனது அண்ணன் சிட்டிபாபு உயிரிழந்ததாகவும் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், “சட்டப்பேரவையில் நீங்கள் தாடையில் கையை வைத்து செய்த சைகை உண்மைதான். மிசாவில் சிறை வைக்கப்பட்டபோதுதான் எனக்கு தாடை உடைந்து இப்படி ஆனது” என விஜய்யை நேரடியாக சாடினார். யார் தன்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது எனக் கூறிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் நூலகம் இருப்பதாக விஜய் கூறியதை சுட்டிக்காட்டி, அங்கு சென்று மிசா வரலாற்றை படித்து தெரிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

அண்ணா மாதிரி தான் நான்!CM விஜய்க்கு ஸ்டாலின் பதில் இத யாரும் எதிர்பாக்கல!

இதன் மூலம் விஜய்யின் மிசா பேச்சு தொடர்பான சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link