சர்வதேச சந்தையின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நேற்று இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. இதுபோன்ற சூழலில், பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் காரணமாக இன்று (செப்டம்பர் 10) வியாழக்கிழமை வர்த்தகத்தில் பின்வரும் பங்குகள் முக்கியக் கவனத்தைப் பெறலாம்:
எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி (ICICI Prudential AMC), சன் பார்மா (Sun Pharma), மீஷோ (Meesho), எம்சிஎக்ஸ் (MCX), அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises), அதானி போர்ட்ஸ் (Adani Ports), என்எம்டிசி (NMDC), டிசிஎஸ் (TCS), கோஃபோர்ஜ் (Coforge), ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) மற்றும் எல் அண்ட் டி (L&T) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கவனம் பெற்றுள்ளன.
என்.பி.சி.ஐ (NPCI)
சில்லறை வங்கியியலில் (retail banking) ஏயு ஏஜெண்டுகளின் செயல்திறனை அளவிடுவதற்கான புதிய மாதிரியை உருவாக்க என்.பி.சி.ஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைந்து செயல்படவுள்ளன.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி (ICICI Prudential AMC)
கோடக் மஹிந்திரா வங்கி உட்பட நான்கு வங்கிகளில் தனது பங்குகளை 9.95 சதவீதம் வரை உயர்த்த ரிசர்வ் வங்கியிடமிருந்து ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
சன் பார்மா (Sun Pharma)
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் ‘சன் பார்மா குளோபல் டிரெசரி சென்டர் ஐஎப்சி’ (Sun Pharma Global Treasury Centre IFSC) என்ற முழுமையான சொந்தமான மறைமுக துணை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
மீஷோ (Meesho)
தனது தயாரிப்புப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இ-காம்கமர்ஸ் தளமான மீஷோ தலைமை தயாரிப்பு அதிகாரி (CPO) பதவியை நீக்கியுள்ளது.
எம்சிஎக்ஸ் (MCX)
இந்தியப் பல சரக்குப் பரிமாற்ற நிறுவனமும் (MCX), IAMAI அமைப்பும் இணைந்து குளோபல் ஃபின்டெக் பெஸ்டிவல் விழாவில் கமாடிட்டி மார்க்கெட்ஸ் இன்னோவேஷன் கவுன்சில் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises)
டெமாசெக் (Temasek) மற்றும் பிளாக்ராக் (BlackRock) உள்ளிட்ட உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் புதிய ஈக்விட்டி முதலீட்டைப் பெற்றுள்ளது.
அதானி போர்ட்ஸ் (Adani Ports)
ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் இரண்டு உலர் சரக்கு பெர்த்களை (dry bulk berths) மேம்படுத்தி இயக்கும் பணிகளுக்கான ஏலத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் அதிகபட்ச தொகையை ஏலப்புள்ளியாக அளித்து வெற்றி பெற்றுள்ளது.
என்எம்டிசி (NMDC)
அரசுக்குச் சொந்தமான என்எம்டிசி நிறுவனம் உயர்தர இரும்புத் தாதுவின் விலையை டன்னுக்கு ரூ. 150 அதிகரித்து, ஒரு டன்னின் விலையை ரூ.5,400 ஆக நிர்ணயித்துள்ளது.
டிசிஎஸ் (TCS)
புனே வளாகத்தில் ‘இண்டஸ்ட்ரியல் அட்டானமி அண்ட் இன்ஜினியரிங் லேப்’ (Industrial Autonomy & Engineering Lab) என்ற ஆராய்ச்சி கூடத்தை டிசிஎஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் முழுமையான மனிதரற்ற தொழிற்சாலை ஆய்வகம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோஃபோர்ஜ் (Coforge)
உள் தணிக்கை ஒன்றில் சில கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் சுதந்திரமான இயக்குநர் ஓ.பி. பட் (O P Bhatt) உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கோஃபோர்ஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India)
பிரத்யேக மின்சார வாகன (EV) தளத்தில் கட்டமைக்கப்பட்ட உள்நாட்டு வெகுஜன சந்தை எஸ்யூவி (mass-market SUV) காரை விரைவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எல் அண்ட் டி (L&T)
இந்தியாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடமிருந்து (ONGC) பெரிய அளவிலான புதிய ஆர்டரைப் பெற்றுள்ளதாக லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) அறிவித்துள்ளது.
Disclaimer:
இந்த செய்தி தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு முதலீட்டு ஆலோசனையும் அல்ல. நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகர்களை அணுகுவது நல்லது.
