Mars Transit In Cancer 2026,Neecha Bhanga Raj Yoga : கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நீசபங்க ராஜயோகத்தால் சவால்கள் குறைந்து சுப காரியம், லாபம் பெறும் 4 ராசிகள் – mars transit in cancer 2026: these 4 zodiac signs that may see relief from challenges, gains and auspicious developments

செவ்வாய் பகவான் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். அங்கு அவளுக்கு நீச வீடாகும். மேலும் அவர் அன்று உச்சம் பெற்ற குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளதால் நீச பங்க ராஜ யோகம் உருவாகிறது. நவம்பர் 12ஆம் தேதி வரை சஞ்சரித்தாலும், அக்டோபர் 31 ல் குரு பெயர்ச்சி நடக்கும்போது இந்த யோகம் முடிகிறது. இந்த காலத்தில் செவ்வாயின் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சுபிட்சம் அதிகரிக்கும் .

செவ்வாய் பகவான் செப்டம்பர் 18ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். பொதுவாக கடக ராசி செவ்வாய் நீச வீடாகும். இதனால் செவ்வாய் பகவான் அளிக்கக்கூடிய பலன்கள் மிகக் குறைவாக கிடைக்கும். ஆனால் தற்பொழுது கழகத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால், அந்த நீசம் அடைந்த செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். இதன் காரணமாக கடினமான சூழல் கூட சாதகமாக மாறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியை தரும். இந்த யோகத்தின் மூலமாக நன்மைகள் அதிகம் பெற உள்ளதாக ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு, உங்கள் ராசி அதிபதி ஆன செவ்வாய் பெயர்ச்சி பலவீனமான கடக ராசியில் சஞ்சரித்தாலும் அங்கு உருவாக்கக்கூடிய நீசபங்க ராஜயோகத்தால் உங்களுடைய நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சரியான நேரங்கள் முடிக்க முடியும். சொத்து சார்ந்த விஷயங்களில் சாதகமான நிலை உருவாகும்.

புதிதாக வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அதற்கான சாதகமான சூழல் உருவாகும். உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் மற்றும் அதில் வலுவான நிலையை காண்பீர்கள். அதன் மூலம் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை இடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசியில் செவ்வாய் நீசம் அடைந்து, குறைவான பலன் தரக்கூடிய நிலையில் இருந்தாலும், இங்கு குரு உச்சம் பெற்று இருப்பதால் உருவாகும் யோகம் உங்களுடைய செயல் மற்றும் சிந்தனையே நேர்மறையாக மாற்றும். இது உங்களுக்கு புதிய யோசனைகளுடன் செயல்பட உதவும். குடும்பத்தினரின் வலுவான ஆதரவு கடினமான பணிகளை கூட முடிக்க உதவும். இந்த நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க முடியும். பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். இந்த காலத்தில் உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். இனிய பேச்சு சூழலை சாதகமாக மாற்றும்.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு செவ்வாய் பகவானின் பார்வை மற்றும் யோகம் காரணமாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடைய வேலைகள் அனைத்தும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். வருமான நிலை உயரக்கூடியதாக இருக்கும். அதனால் உங்களுடைய முயற்சிகளை அதிகரித்தால் நன்மைகளும் பெரிய அளவில் அடைய முடியும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் செயல்பாடுகளில் நன்மை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சிக்கனமாக உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி திறமையை நிரூபிப்பீர்கள்.

தனுசு ராசி

தனுசு ராசி அன்பர்களுக்கு செவ்வாய் பகவானின் பார்வை ஆனது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை, ஒற்றுமையையும் அதிகரிக்கும். உங்கள் திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் பிறருடைய ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக லாபம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் விலகும். புதிய வேலை தேடக்கூடிய அன்பர்களுக்கு நல்ல வாய்ப்புகள் பெறுவார்கள்.
கடின உழைப்பு மற்றும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இந்த காலத்தை உங்களுடைய வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்கள் மற்றும் தொழிலில் கூட்டணிகளின் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட விஷயங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியாது.

மகர ராசி

மகர ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் செவ்வாயின் பெயர்ச்சி நிசபங்க ராஜயோகம் பெரிய அளவில் நன்மையை தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை எனது வியாபாரத்தில் புதிய பொறுப்புகள் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் எடுக்க முயற்சிகள் மற்றும் கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவீர்கள்.

உங்கள் தொழில் தொடர்பான முன்னேற்றமும் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களையும் பெறக்கூடிய காலம். குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு காரணமாக குடும்ப பொறுப்புகளை முடிப்பதிலும், நிதி நிலையை சரியான விதத்தில் பயன்படுத்துவதிலும் வெற்றி கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. மேலும் விரிவான தகவலுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

Source link