மக்களை நீதிபதியாக்கும் பாஜக: மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை’ பாஜக-வின் வியூகம் பலிக்குமா? |The BJP Empowers the People as Judges: From West Bengal to Tamil Nadu—Will the BJP’s Strategy Succeed?

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவது பா.ஜ.க-வின் பாணி. உதாரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் ஊழலை விட, பா.ஜ.க-வின் ‘தேர்தல் பத்திரங்கள்’ மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெரிய ஊழல் அல்லவா?

பீகாரில் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்த லல்லு பிரசாத் யாதவ் மீது தீவன ஊழல் வழக்கை ஏவி, அவரது அரசியல் வாழ்க்கையைச் சிதைத்ததைப் போலவே, தற்போதும் சமூக நீதி பேசும் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் பா.ஜ.க-வின் இத்தகைய ‘நரேட்டிவ்’கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தமிழகத்தில் ஓரளவு சுதந்திரமான ஊடக விவாதங்கள் இருப்பதால், ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகள் இங்கு எடுபடுவது கடினம். குறிப்பாக, தி.மு.க அரசின் ‘விடியல் பயணம்’ போன்ற திட்டங்கள் பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள நேரடித் தாக்கத்தை இத்தகைய தரவுகள் மூலம் முறியடிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே. எனவே, பா.ஜ.க-வின் இந்த வியூகம் தமிழ்நாட்டில் பலனளிப்பது சிரமம்தான்.” என்றார்.

Source link