சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து, சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. மொத்தம், 33 போட்டிகளில், சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்பட்டு, அதில் 14 வெற்றிகளையும், 19 தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம், 42.42 சதவீதகமாக மட்டுமே இருக்கிறது.
மேலும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ஒருமுறை கூட சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல், சிஎஸ்கே கடும் பின்னடைவை சந்தித்தது.
கேப்டன்ஸி பிரச்சினை: கடந்த சீசனில், கேப்டனாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், வெறும் 123 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடினார். அதே சமயம், சஞ்சு சாம்சன், 165 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அசத்தினார். 2 சதங்களையும் அடிக்க முடிந்தது. இதனால், தனுக்குதான் ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டன் பதவியை தர வேண்டும் என சஞ்சு சாம்சன் கேட்கும் நிலையில், ஐபிஎல் 2027 சீசனிலும் நான்தான் கேப்டனாக இருப்பேன் என ருதுராஜ் கெய்க்வாட் அடம்பிடிக்கிறாராம்.
இந்நிலையில், இந்த கேப்டன்ஸி பிரச்சினை குறித்து, சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிர ஆலோசனையை மேற்கொண்டது. அப்போது, ஐபிஎல் 2027 சீசனோடு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு, ஐபிஎல் 2028 சீசனில் இருந்து ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்தனர். குறிப்பாக, ஐபிஎல் 2027 சீசனில், முதல் பாதியில் சிஎஸ்கே சொதப்பும் பட்சத்தில், இரண்டாவது பாதியில் இருந்தே ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க, சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், ஐபிஎல் 2028 சீசனில் இருந்து தன்னை அணியில் இருந்து நீக்க, சிஎஸ்கே முடிவு செய்ததால், ருதுராஜ் கெய்க்வாட் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால், அவர் டிரேடிங்கில் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 25 கோடி கொடுத்து, கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில், கேமரூன் கிரீனை, கேகேஆர் அணி நிர்வாகம், 25.20 கோடிக்கு வாங்கியது. இவரை அணியில் இருந்து விடுவித்து, அந்த தொகையில், ருதுராஜ் கெய்க்வாட்டை வாங்க கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டும், கேகேஆர் அணியில் இணைய ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 31 வயதாகிறது. இவரால், அடுத்த 4 வருடங்கள் வரை அபாரமாக செயல்பட முடியும்.
ருதுராஜ் கெய்க்வாட், டிரேடிங்கில் வெளியேற விரும்புகிறேன் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்த உடனே, மகேந்திரசிங் தோனி, ருதுராஜை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட், சமரசம் ஆகவில்லையாம்.
தன்னை டிரேடிங்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்பிவிடுங்கள். நான், அழுத்தங்கள் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். சிஎஸ்கேவில் இனி, அழுத்தங்கள் இல்லாமல் ஆட முடியாது. இதுதான், நான் டிரேடிங்கில் வெளியேற முக்கிய காரணம், மற்றபடி சிஎஸ்கே நிர்வாகம் மீது எந்த மனக்கசப்பும் இல்லை என தோனியிடம் ருதுராஜ் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
