24 மணி நேரத்தில் இத்தனை பாலியல் குற்றங்களா? தமிழக அரசை அதிரவைத்த வானதி சீனிவாசன் லிஸ்ட்! – vanathi srinivasan slams tvk government over women safety in tamil nadu

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாநில அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய தொடர் பாலியல் அத்துமீறல்களைப் பட்டியலிட்டு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய தொடர் சம்பவங்கள்:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்பதற்குச் சான்றாகப் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கொடூரச் சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் பதிவின் விவரம்,

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்
கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை…
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை..
சிவகங்கை மாவட்டம் சாக்கோடை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..
சென்னை அரும்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை
திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வட மாநில இளைஞர்

சென்னையில் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர்…
இராமநாதபுரம், கீழக்கரை இளைஞர் கஞ்சா இளைஞர்களால் பாலியல் வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கலில் தனியார் பஸ் டிரைவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..
இவை வழக்குகளாகப் பதிவாகி செய்திகளில் வந்தவை மட்டுமே.. இன்னும் எத்தனை பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ? ஏன்.. இந்தப் பதிவினை போஸ்ட் செய்யும் போது கூட தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் பெண் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். பெருமையாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கப் பெண்படையின் தற்போதைய நிலை என்ன?
இத்தனை செய்திகளைப் பார்த்த பின்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை..! அரசில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் என பதிவிட்டு உள்ளார்.

சிங்கப்பெண் படையில் சிக்கல்! சைலேந்திர பாபு சொன்ன தகவல்!

“சிங்கப் பெண்படை” எங்கே போனது?

மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் பெருமையுடன் தொடங்கப்பட்ட “சிங்கப் பெண்படை” திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், இத்திட்டம் வெறும் விளம்பரமாகவே சுருங்கிவிட்டதா என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அரசுக்கு எதிரான சாடல்

“இவை அனைத்தும் காவல் நிலையத்தில் வழக்குகளாகப் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியே வந்த செய்திகள் மட்டுமே. இன்னும் வெளியில் வராமல் மறைக்கப்படும் குற்றங்கள் எத்தனை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதைய அரசின் கீழ் பெண்களுக்கான பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதைப் பொதுமக்கள் இப்போது நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கூறி, மாநில அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Source link