சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தற்போது கேப்டன்ஸி பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சீசனில் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டும் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2027 சீசனிலும் தனக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என சஞ்சு சாம்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி, இருவரும் கேப்டன் பதவிக்கு அடித்துக் கொள்ளும் நிலையில் இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கேப்டன்ஸி பிரச்சினையை யார் ஏற்படுத்தினாலும், அதனை சகித்துக் கொள்ள கூடாது. ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன், இந்த இருவரையும் வெளியேற்றி, ஆயுஷ் மாத்ரேவுக்கு புதுக் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகிகள் முடிவு செய்தனர். குறிப்பாக, அடுத்த சீசனின் 2ஆவது பாதியில் இருந்தே ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது.
இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தோனி சமரசம் செய்ய முயன்றும், அதனை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கவில்லையாம்.
இந்நிலையில், இந்த தகவல் வெளியான ஒரே நாளில், இந்திய ஏ அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமித்துள்ளனர். குறிப்பாக, ஆர்சிபி அணிக்கு 2 முறை கோப்பை வென்றுகொடுத்த ராஜத் படிதர், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கும்போதும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர். இதற்கு பின்னால், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருப்பாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
கம்பீர், இதற்குமுன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்தார். தற்போது, ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கேவில் இருந்து விலகி கேகேர் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், உடனே இந்திய ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்துள்ளனர். இந்த இரண்டு விஷயங்களையும் முடிச்சுபோட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
ஆஸி ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி பட்டியல்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் (துணைக் கேப்டன்), பிரியான்ஸ் ஆர்யா, சாய் சுதர்ஷன், ராஜத் படிதர், நமன் தீர், குமார் குஷக்ரா, பிரப்சிம்ரன் சிங், ஹர்திக் பாண்டியா (பிட்னஸ் கிரியர் செய்தால் மட்டுமே), நிதிஷ் சிந்து, விப்ராஜ் நிஹம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷாத் கான், குர்ஜாப்னித் சிங், யாஷ் தாகூர்.
அட்டவணை என்ன? மூன்று போட்டிகள் கொண்ட, இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும். அடுத்து, இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதியும், மூன்றாவது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியும் நடைபெறும்.
இந்த மூன்று போட்டிகளும், புதுச்சேரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரியன்ஸ் ஆர்யா செயல்பாடு எப்படி இருக்கும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரோஹித்துக்கு அடுத்து, அவரது இடத்தை பிடிக்க பிரியான்ஸ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி இருக்கிறது.
