சட்டத்தில் தடை இல்லாதபோது ​​ஐபில் போட்டிகளை எப்படி தடுக்க முடியும்?: ஐகோர்ட் கேள்வி

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு முறையிட்டார். ஆனால் இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்குக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே, அது வழக்கமான நடைமுறையின்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, ​​போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே இருங்கள், போட்டிகள் நடத்தப்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

Source link