IND vs AFG T20 – அட்டவணையில் திடீர் மாற்றம்: டெல்லி காவல்துறை கேட்டுக் கொண்டதால் பிசிசிஐ முடிவு – india vs afghanistan first t20 schedule may change

ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த உள்ளது. ஆப்கானிஸ்தானில் சரியான மைதானங்கள் இல்லாத நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வாடகைக்கு எடுத்துள்ளது. மூன்று போட்டிகளையும், இந்த மைதானத்தில்தான் நடத்த உள்ளார்கள்.

அட்டவணை என்ன? முதல் டி20 போட்டி, செப்டம்பர் 13ஆம் தேதியும், அடுத்து, 15, 17 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணியும், வீரர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், தற்போது வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

டெல்லி காவல்துறை கடிதம்: இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் வாரியத்தை தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை, பிரிக்ஸ் மாநாட்டிற்காக, செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை, வெளிநாட்டு பிரதமர்களுக்கு அதீத பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளதால், செப்டம்பர் 13ஆம் தேதிவரை கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளதார்.

இதனால், முதல் போட்டிக்கான அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. ஒருவேளை, மாற்றம் செய்யப்பட்டால், முதல் போட்டியை, செப்டம்பர் 14ஆம் தேதியும், அடுத்த போட்டிகளை 15, 17 ஆகிய தேதிகளிலும் நடத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால், முதல் போட்டியை ஒத்திவைத்துவிட்டு, இரண்டாவது போட்டியை செப்டம்பர் 15ஆம் தேதியும், அடுத்து 17, 19 ஆகிய தேதிகளிலும் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது.

இந்திய அணி பட்டியல் : ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருச் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தாகூர்.

இத்தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது, சுந்தர், பும்ரா, நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் முழு பிட்னஸை எட்டாமல் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிட்னஸ் டெஸ்டில், சுந்தர், பும்ரா, நிதிஷ் ஆகியோர் தேர்ச்சி பெற்ற நிலையில், ஹர்ஷித் ராணா மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

மற்ற வீரர்களுக்கு சாதாரண பிரச்சினைதான். ஆனால், ஹர்ஷித் ராணாவுக்கு, அதிக எடை காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிக எடை காரணமாக, ஹர்ஷித் ராணாவுக்கு தசை பிடிப்பு பிரச்சினை ஏற்படுத்துள்ளதால், அவர் உடல் எடையை குறைத்தால் மட்டுமே இப்பிரச்சினையில் இருந்து முழுமையாக குணமடைய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், ஹர்ஷித் ராணாவுக்கு, உடல் எடையை குறைக்க, பிசிசிஐ மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

பயிற்சியில் 10 வீரர்கள்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு 15 வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமே 10 வீரர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் அக்சர் படேல், ரவி பிஷ்னோய்க்கு எதிராக அதிக பந்துகளை எதிர்கொண்டார்கள்.

தூலீப் டிராபியில் ஆடிய வீரர்கள், பிட்னஸ் டெஸ்ட் முடிந்த வீரர்கள் இன்று இந்திய அணி குழுவில் இணைவார்கள். மேலும், முதல் போட்டி எந்த தேதியில் நடைபெறும் என்பதை இன்று பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link