கோவை: சுங்கச்சாவடிகள் கட்டண உணர்வால் கோவை தொழில்துறைக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்ள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன. இச்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணத்தை வசூலிக்க 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இவற்றில் சென்னை – கன்னியாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய மானவையாகும். சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
