இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

சென்னை,

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

”சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று! சமத்துவம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த இமானுவேல் சேகரன் அவர்கள், தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.

அவரது போராட்டமும் தியாகமும் சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் அழியாத தடமாகத் திகழ்கிறது. அவரது நினைவு நாளில், சாதி வேறுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link