அதிமுக வேட்பாளர் காலில் விழுந்த திமுக வேட்பாளர்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக, திமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றன. ஸ்டார் தொகுதிகளிலும் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அதேபோல் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த சம்பவம் சுவாரசியம் பெற்றுள்ளது. அங்கு வந்த திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் காலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர் சுதாகர் திடீரென விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source link