விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை: பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள், தொடர் விடுமுறைகள் வருகின்றன.

இதையடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு, இன்று வெள்ளிக்கிழமையே புறப்பட்டு செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில், இன்று பயணக் கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளது. இது பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Source link