‘விஜய்யை நோக்கி பேசிய வாகன ஓட்டி’- ஆபாச வார்த்தைகளால் மிரட்டிய பெண் ரசிகை

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் தனது வேட்புமனுவை இன்று (02.04.2026) தாக்கல் செய்தார். இதையடுத்து திருச்சி கிழக்கில் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் விஜய் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக விஜய் சென்னையிலிருந்து திருச்சி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது அவரது காரை பலரும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் ”இன்னும் எத்தனை பேரின் உயிரை வாங்க போகிறாரோ” என சொல்ல, உடனே அங்கு ஸ்கூட்டியில் வந்த பெண் ரசிகை ஒருவர் அந்த நபரை விடாமல் விரட்டி அடித்துப் பின் தொடர்ந்து சென்று, அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source link