முதல்வர் விஜய் லண்டன் சென்றது ஏன்? சென்னை திரும்பியதும் பதில் சொல்ல வேண்டும் – நயினார் நாகேந்திரன் – nainar nagendran demands cm vijay trip to london explanation upon his return to chennai

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 10) இரவு 10 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. லண்டனில் 6 நாட்கள் தங்கியிருக்கும் முதலமைச்சர், பல்வேறு முன்னணிச் சர்வதேசத் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்துத் தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களைகளை சந்தித்த அவர், முதல்வர் விஜய் சொந்த விஷயமாக வெளிநாடு சென்றுள்ளாரா அல்லது லண்டனில் முதலீடுகள் ஈர்பதற்கான தலைவர்களைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளாரா என்ற விவரம் அவர் திரும்பிய பிறகே தெரியவரும். அதற்கான விளக்கத்தை அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராப்புரம் இடைத்தேர்தலில்,வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு? எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக் கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், “எங்களது கூட்டணி நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” எனத் தன்னம்பிக்கையுடன் கூறினார்.

Source link