திருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் கிடந்த ஏழு பவுன் செயின் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆற்றிங்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வட்டியூர்காவை சேர்ந்த பாகுலேயன் 56, என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து செய்த பெண்களை குறி வைத்து ஏமாற்றி திருமணம் செய்தவர் என்பது தெரிய வந்தது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை இவருக்கு பல மனைவிகள் உள்ளனர். பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடி அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இவர் குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என பல்வேறு பெயர்களில் இவர் திருமணம் செய்துள்ளார். விசாரணைக்கு பின், ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link