பீகாரை புரட்டிப் போடும் வெள்ளம்..! 45 லட்சம் பேர் பாதிப்பு..! மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, யமுனையில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுவதால், வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பீகாரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கோஷி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகள், சாலைகளில் வெள்ளம் புகுந்தால், மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாட்னா உட்பட மாநிலத்தின் 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கரையோரங்களில் வசிப்போர், வெள்ளத்தில் வீடுகளை இழந்தோர் என மொத்தம் 45 லட்சம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, கம்பளி போர்வை உள்ளிட்டவற்றை அரசும், தன்னார்வ நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. நேபாள எல்லையில் அமைந்துள்ள பீகாரின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பாகல்பூர் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய சாக்கடையில் தவறி விழுந்து, 4 குழந்தை, ஒரு பெண் என மொத்தம் 5 பேர் பலியாகினர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள, பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பாகல்பூர், பெகுசராய், பக்ஸ்ர் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

போதையில் 19 வயது மகளுடன் தந்தை..!! நேரில் பார்த்த தாய்..!! நள்ளிரவில் கதறிய குடும்பம்..!! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்..!!

Source link