‘வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரத்திற்காக தங்கையை களமிறக்கிய தவெக ஆதவ் அர்ஜூனா!’ – பின்னணி என்ன? |“Why Did TVK Leader Aadhav Arjuna Send His Sister to Campaign in Villivakkam? Full Background Explained”

இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, “அடுத்த வாரத்திலிருந்தி வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கப் போகிறேன். என் சார்பில் என் தங்கை சீதா லெட்சுமியும் பிரசாரம் செய்வார்’ என தங்கையை மேடையிலேயே நிர்வாகிகளுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். மார்ச் 29 ஆம் தேதி விஜய் தனது 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தொகுதிக்குள் வீடு வீடாக பிரசாரம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆதவ் முன்பு கூறியதைப் போல நேற்றிலிருந்து தனது தங்கையையும் தொகுதியில் களமிறக்கியிருக்கிறார். அவரும் வீடு வீடாக போய் அண்ணனுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக ஆதவ் தனது தங்கையை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

Source link