இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் பார்மெட்டிலும், ஐபிஎலிலும் மட்டுமே ரெகுலராக விளையாடி வருகிறார்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆடுவதுதான் தனது லட்சியம் எனக் கூறி, தொடர்ச்சியாக ஒருநாள் பார்மெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். மேலும், இவர் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருவதால், அவரை புறக்கணிக்க முடியாத நிலையில் பிசிசிஐ இருக்கிறது.
ஆனால், ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் அல்லது பிரியான்ஸ் ஆர்யாவுக்கு ஓபனர் வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தொடர்ச்சியாக பிசிசிஐயிடம் தெரிவித்து வருகிறாராம். ரோஹித்துக்கு தற்போது 39 வயது ஆகிறது. அவரை நீக்கிவிட்டு, இந்த இரண்டு இளம் வீரர்களில் ஒருவருக்கு தற்போது இருந்தே வாய்ப்பு கொடுத்தாக வேண்டும், ரோஹித்துக்கு நிகராக இளம் வீரர்களாலும் அபாரமாக ஆட முடியும் என கம்பீர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோஹித் சர்மா ஷோ: இந்நிலையில், பிசிசிஐ விதிமுறைக்கு முரணாக தற்போது, ரோஹித் சர்மா செயல்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ரோஹித் சர்மா ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஷோ ஒன்றை நடத்த உள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி, இரவு 9:30 மணிக்கு அந்த ஷோ வெளியாகும். சோனி என்டர்டன்மெண்ட் தொலைக்காட்சியில் அந்த ஷோ வெளியாக உள்ளது.
பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் ஒருவர், இதுபோன்று தனியார் தொலைக்காட்சியில் ஷோ நடத்த கூடாது அல்லது முன்கூட்டியே பிசிசிஐயிடம் இதுகுறித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இது எதையும் ரோஹித் சர்மா கடைபிடிக்கவில்லை. பிசிசிஐயிடம் தெரிவிக்காமலே, இந்த ஷோவை ரோஹித் சர்மா நடத்த உள்ளாராம். இது, பிசிசிஐ விதிமுறைக்கு எதிராக இருப்பாதல், ரோஹித் சர்மாவுக்கு வாழ்நாள் தடை கூட விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. உரிய காலத்திற்குள் ரோஹித் சர்மா, சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்றால், அடுத்து அவரை இந்திய கிரிக்கெட்டில் சேர்க்க கூடாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதாவது, இந்திய அணியில் இருந்து மட்டுமல்ல, ஐபிஎலில் இருந்தும் ரோஹித் சர்மாவை தடை செய்ய முடியும்.
ஓய்வு முடிவு எடுத்துள்ளாரா? ரோஹித் சர்மா தைரியமாக பிசிசிஐக்கு எதிராக செயல்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு தனது பெயரை பிசிசிஐ தேர்வு செய்யாது என்பது முன்கூட்டியே ரோஹித் சர்மாவுக்கு தெரிந்துவிட்டதா? இதனால்தான், பிசிசிஐ விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு, பிசிசிஐயா, நாமலா என ஒரு கை பார்த்துவிடலாம் என ரோஹித் முடிவு செய்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு இருப்பதால், தனக்கு எதிராக பிசிசிஐயால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியத்தில் ரோஹித் இப்படி, அதிரடி முடிவை எடுத்துள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விரைவில், பிசிசிஐக்கு ரோஹித் சர்மா விளக்கம் கொடுக்க உள்ளார். விளக்கத்தை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
