பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் யார்… யார்? – முழு விவரம்

டெல்லி,

பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடைபெற உள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துகொண்டன. இதையடுத்து, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.

பிரிக்ஸ் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.

பிரிக்ஸ் உச்சி மாநாடு

இதனிடையே பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என மொத்தம் 2 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் விவரம்

* இந்திய பிரதமர் – நரேந்திர மோடி

* ரஷிய அதிபர் – விளாடிமிர் புதின்

* சீன அதிபர் – ஜி ஜின்பிங்

* தென் ஆப்பிரிக்க அதிபர் – சிரில் ராமபோசா

* பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி – மவுரோ வெய்ரா

* ஈரான் அதிபர் – மசூத் பெசஸ்கியான்

* எகிப்து அதிபர் – எல் சிசி

* இந்தோனேசிய அதிபர் – பிரபோவா சுபியாந்தோ

* எத்தியோப்பியா பிரதமர் – அபே அகமது அலி

* மலேசியா பிரதமர் – அன்வர் இப்ராகிம்

* சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி – பைசல் பின் பர்கன் அல் சவுத்

* ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் – ஷேக் கலீத் பின் முகமது பின் சயது அல் அயான்

* உகாண்டா துணை அதிபர் – ஜெசிகா அலொபோ

* நைஜீரியா துணை ஜனாதிபதி – கசீம் ஷெடிமா

* கியூபா வெளியுறவுத்துறை மந்திரி – புருனோ ரெட்ரிகியூஸ் பரிலா

* பெலாரஸ் வெளியுறவுத்துறை மந்திரி – மெக்சிம் ரெசன்கொவ்

* வியட்நாம் பிரதமர் – லி மின் ஹங்

* கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ்

* ஐநா சபையின் தலைவர் – அன்டோனியோ குட்டரெஸ்

ஆகியோர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

Source link