மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் – ரஷியா போர்
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். ஆனாலும், உக்ரைன், ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள போலங்ஸ்கை மற்றும் டினிப்ரோவ்ஸ்கை மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மீது ரஷியா இன்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
