சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை

சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்து, சட்டசபை தேர்தலை சந்திக்கிறார் ராமதாஸ். தன் தரப்பில் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியலை, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது கட்டமாக ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

அதன்படி,

அணைக்கட்டில் வெங்கடேஷ்,

ஆற்காட்டில் அஜய்ராஜ்,

அரக்கோணத்தில் வெற்றிவேல்,

கீழ்வேளூரில் வேதமுகுந்தன்,

சோளிங்கரில் விஜயன்,

திட்டக்குடியில் கருப்பன் மாணிக்கம்,

ஆரணியில் கலைமணி,

கீழ்பென்னாத்துாரில் ஜானகிராமன்,

ஓமலுாரில் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், உத்திரமேரூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு பதிலாக, மாநில மகளிரணி செயலர் சரளா ராஜு போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Source link