நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானின் ராணுவ வலிமை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டது. அமெமெரிக்காவின் ராணுவ இலக்குகள் விரைவில் எட்டப்படும்.
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரான் மீண்டும் கற்காலத்திற்கு செல்லும்” என்று எச்சரித்தார்.
இதற்கு எதிர்வினை ஆற்றிய ஈரானிய புரட்சிகர காவல்படையின் ளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி, “ஹாலிவுட் பிரமைகள் உங்கள் மனதை பாதித்துள்ளன.
வெறும் 250 ஆண்டுகால வரலாற்றை வைத்துக்கொண்டு, 6,000 ஆண்டுகளுக்கு மேலான நாகரீகத்தை மிரட்டுகிறீர்கள்.
