அணைக்கட்டு : வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், உதயநிதியின் தேர்தல் பிரசார கூட்டம், நேற்று நடந்தது.

அணைக்கட்டு : வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், உதயநிதியின் தேர்தல் பிரசார கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காசு கொடுத்து மக்களை தி.மு.க.,வினர் திரட்டி வந்ததாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் கிளம்பி உள்ளது.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில், தி.மு.க., அணைக்கட்டு வேட்பாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ.,வை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி, நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

முதலாவதாக, அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுகத்துார் பஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது நேமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர், அந்த பகுதி மக்களுக்கு காசு கொடுத்து டாட்டா ஏசி வாகனத்தில் ஆடு,மாடுகள் போல் ஏற்றிக்கொண்டு வந்தார். இதை வீடியோ பதிவாக்கிய சிலர், காசு கொடுத்து பிரசார கூட்டத்துக்கு மக்களை திரட்டி வருகின்றனரே என உதயநிதியை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Source link