பேராசிரியரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாநேற்று உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலமன் பாப்பையாவின் உடல் அவரது சொந்த ஊரான மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர்விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு?
இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பதிலளித்த நிர்மல் குமார், அரசு மரியாதை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனால் சாலமன் பாப்பையாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
இந்த சூழலில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
cm vijay கொண்டாடும் தமிழக மக்கள்! வரலாறு பேசும் நிகழ்வு! Explained
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்றத் துறையில் நீண்ட காலமாக தனது பங்களிப்பை வழங்கி வந்த சாலமன் பாப்பையாவின் மறைவு பல்வேறு தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source link
