லக்னோ: லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த 2024ல் லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலுடன் வாக்குவாதம் செய்தார். ஏலத்தில் இவரை தக்கவைக்கவில்லை. தற்போது டில்லி அணிக்காக விளையாடுகிறார் ராகுல். மறுபக்கம் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷாப் பன்ட்டை வாங்கியது லக்னோ. இவரையே கேப்டனாக நியமித்தது.
சமீபத்தில் லக்னோவில் நடந்த லீக் போட்டியில் டில்லி அணியிடம் தோற்றது லக்னோ. இதனால் ஆத்திரமடைந்த கோயங்கா, மைதானத்தில் வைத்தே ரிஷாப் பன்ட், பயிற்சியாளர் லாங்கருடன் ஆவேசமாக பேசினார். கடந்த ஆண்டும் இதே போல ரிஷாப் பன்ட்டை கடிந்து கொண்டார். கோயங்கா அணுகுமுறைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது வெளியில் விமர்சிப்பதற்கு பதிலாக ‘டிரஸ்சிங் ரூமில்’ தனிப்பட்ட முறையில் வீரர்களிடம் அதிருப்தியை தெரிவிப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை மறுத்துள்ள லக்னோ அணி நிர்வாகம் தனது தரப்பில் ஒரு ‘வீடியோ’வை வெளியிட்டுள்ளது. அதில் ரிஷாப், கோயங்கா சகஜாக பேசுகின்றனர். ‘நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மையல்ல. ‘எடிட்’ செய்யப்படாத வீடியோ பாருங்கள்’ என குறிப்பிட்டுள்ளது.
கோயங்கா வெளியிட்ட செய்தியில்,’கேப்டன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வலிமையாக மீண்டு வருவோம்,’ என தெரிவித்துள்ளார்.
