என் தலைவரை தொட்டது.. யாராக இருந்தாலும் விடமாட்டோம் – சென்னை மேயர் பிரியா – mayor priya stated that they would not spare anyone who laid a hand on their leader

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு காரசாரமாகப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விட மாட்டேன் என்று சொல்வார்கள். அதேபோல், எங்கள் தலைவரைத் தொட்டுப் பேசுபவர் யாராக இருந்தாலும் சரி… அவர் மாண்புமிகுவாகவே இருந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று மிகக் காட்டமாகக் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மேயர் பிரியாவின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link