வாஷிங்டன்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல்கராஸி (81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்றுமுன்தினம் தீவிரப்படுத்தின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
