வ ரி செலுத்துவோர் சந்திக்கும் சிக்கலான வரி நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதிய இணையதளம் மற்றும் ‘கர் சாத்தி’ என்ற செயற்கை நுண்ணறிவு உதவி சேவையை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரி சட்டம் – 2025ன் கீழ், அனைத்து படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, கர் சாத்தி ஏ.ஐ., வரி செலுத்துவோரின் சந்தேகங்களுக்கு, 24 மணி நேரமும் உடனுக்குடன் பதிலளிக்கும்.
மேலும், புதிய வரி விதிகளை விளக்குவதற்காக, நாடு முழுதும் விழிப்புணர்வு பிரசாரத்தையும் வருமான வரி துறை துவங்கிஉள்ளது. புதிய வரி நடைமுறைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
எனவே, வருமான வரி துறையின் புதிய இணையதளத்தை பயன்படுத்தி, அங்குள்ள விளக்க கையேடுகள் மற்றும் கர் சாத்தி ஏ.ஐ., உதவியுடன் நிதி திட்டமிடலை மேற்கொள்ளலாம்.
