மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து புதுவைக்கு இன்று வரும் பிரதமர் பதில் தர வேண்டும்: வைத்திலிங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தெலங்கானா துணை முதல்வர் பட்டி பல்லு விக்ரம் மார்கா, மாநிலபோக்குவரத்துத் துறை அமைச்சர் பூனம் பிரபாகர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் கூறுகையில், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்கள். இதுவரை தரவில்லை. புதுச்சேரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, மாநில அந்தஸ்து குறித்து விளக்கம் தர வேண்டும். அவ்வாறு பதில் தராவிட்டால் முதல்வர் ரங்கசாமி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், கட்சி கட்டுப்பாட்டை மீறி வேட்பு மனு தாக்கல் செய்து திரும்ப பெறாத காங்கிரஸ் வேட்பாளர்களை கண்டித்துள்ளோம்.

Source link