டெல்லியில் சீன அதிபர் இறக்கிய ‘Hongqi N701’ சொகுசு கார்..!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள ‘ஹாங்கி என்701’ (Hongqi N701) என்ற அதிநவீன கவச சொகுசு கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாட்டுப் பயணங்களின் போது தனது பிரத்யேக ‘அவுரஸ்’ காரைப் பயன்படுத்துவது போலவே, ஜி ஜின்பிங்கும் சீனா தயாரிப்பான ‘ரெட் பேனர்’ பிராண்டின் Hongqi N701 லிமோசின் காரையே சர்வதேசப் பயணங்களில் பயன்படுத்தி வருகிறார். சுமார் 5.5 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் காரில் 21 இன்ச் புல்லட் புரூப் சக்கரங்கள், பலத்த வெளிப்புறக் கவசத் தகடுகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், பயங்கர வெடிகுண்டுத் தாக்குதல்களை தாங்கும் வலிமை கொண்ட இந்த வாகனம், ரசாயன மற்றும் உயிரி ஆயுத தாக்குதல்களில் இருந்து பயணிகளைக் காக்கும் வகையில் தனித்துவமான ஏர்-பிரஷர் (Air Pressure) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. 408 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 6.0 லிட்டர் V12 இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு வாகனமான புகழ்பெற்ற ‘தி பீஸ்ட்’ (The Beast) காருடன் ஒப்பிடப்படும் இந்த கார், சர்வதேச அளவில் அதிபர் ஜின்பிங்கிற்கு வழங்கப்படும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடையாளமாக டெல்லி சாலையில் வலம் வந்தது.

புதிய தலைமைச் செயலகம் அமைய விடமாட்டோம்..!! மீனவ மக்கள் நம்பிக்கையோடு இருங்க..!! சீமான் பரபரப்பு அறிக்கை..!!

Source link