புது டி.ஜி.பி., சந்தீப் ராய் பொறுப்பேற்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யாபாரதி

சென்னை: தமிழக போலீஸ் டி.ஜி.பி., உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, தமிழக காவல் துறையின் படைத் தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக உள்ள வெங்கடராமன் மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள, காவலர் உயர் பயிற்சியகத்தின் இயக்குனரும், டி.ஜி.பி.,யுமான சந்தீப்ராய் ரத்தோட், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன்; தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்; கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல ஐ.ஜி., சரவணசுந்தர் ஆகியோர் மாற்றப்பட்டு, அந்த பணியிடங்களுக்கு முறையே, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி., அபிேஷக் தீக்ஷித், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார், மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி., ரம்யாபாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மாற்றப்பட்டு, அருண்தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றப்பட்டு, விஷுமகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சந்தீப் ராய் ரத்தோட், நேற்று இரவு பொறுப்பேற்றுக்கொண்டார்.

Source link