ரசிகர்கள் ஓட்டுகளை கவர பழனிசாமிக்கு அஜித் படம்

வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அஜித் மற்றும் பழனிசாமி இருக்கும் படத்தை அக்கட்சியினர் பரிசளித்து வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த 28ம் தேதி சென்னை சோழிங்கநல்லுார் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்தபோது, அவரும் நடிகர் அஜித்தும் ஒன்றாக இருக்கும் படத்தை, பழனிசாமிக்கு தொண்டர்கள் பரிசளித்தனர்.

நாகர்கோவிலிலும் அதேபோல் படத்தை பரிசளித்தனர். சிவகாசியில், பழனிசாமி – அஜித் – சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி ஆகிய மூவரும் இருக்கும் படம் வழங்கப்பட்டது. இப்படி பழனிசாமி பிரசாரத்தில், அஜித் படத்தை தொண்டர்கள் பரிசளித்து வருவது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சினிமாவில் நடிகர் விஜய்க்கு போட்டியாளர் அஜித். விஜய் தற்போது தனி கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடும் நிலையில், அஜித் ரசிகர்களின் ஓட்டுகளைப் பெறும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Source link