அவர்களிடம் வளர்மதி பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் சொத்துவரி உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளது போல, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதன பெட்டி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு ரூ.2 ஆயிரம் என அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற் றப்படும். தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதியை மாற்றுவேன்’’ என்றார்.
