திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொது வரிசையில் தரிசனம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிசலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில ஆண்டு காலமாக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் விஐபி தரிசன வரிசையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
VIP தரிசனத்துக்கு வந்த சேகர்பாபு
முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்தார்.
சி.எம் விஜய் போட்ட முக்கிய உத்தரவு… உற்று கவனித்த அமைச்சர் விக்னேஷ்
வடக்கு கோபுரம் வழியாக கோவில் உள்ளே வருகை தந்த அவர் கோவிலில் கொடிமரம் அருகே சென்று சம்பந்த விநாயகரை வழிபட்டு வைகுந்த வாயில் வழியாக உள்ளே சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக நேரடியாக விஐபி வரிசையில் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்ய அமைச்சர் காத்திருந்தார்.
பொதுவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த சம்பவம்
ஆனால் அங்கு கோவில் ஊழியரோ இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களோ யாரும் இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்த அவர் கியூ லைன் வழியாக சென்று மற்றொரு கேட்டின் வழியாக உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.சாமி தரிசனம் முடித்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது துணைவியாருக்கு கோவில் சிவாச்சாரியார் மட்டும் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.
நடிகர் நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் வெளி மாநில பக்தர்கள் பலர் விஐபி தரிசனம் செய்யக்கூடிய நிலையில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விஐபி தரிசனம் மறுக்கப்பட்டு சாதாரண வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் வருகை -புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
கோயில்களுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும்போது பொது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க இந்து சமய அறநிலையத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதில், பிரபலங்கள் வருகை குறித்து ஒரு நாளைக்கு முன்பே ஆணையர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது. பொதுமக்களின் தரிசனத்திற்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது. கோயில் புனிதத்தையும் மரபையும் பாதுகாத்து, அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே உடன் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த விதிமுறைகளைக் கோயில் செயல் அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு திடீர் வருகையால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Source link
