லீடர்னா என்னனே தெரியாம, எதிரணி மீது பழி போட்டு, தெறிச்சு ஓடுவது ஏமாத்து வேலை: யாரை சொல்றார் விஜய் சேதுபதி? – bigg boss tamil 10 host vijay sethupathi view about leader and leadership is viral

விஜய் சேதுபதி கருத்து : இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஜனநாயக அறை வைத்து போட்டியாளர்களை ஆளும் எணி, எதிர் அணி என இரண்டு பிரிவாக பிரித்து விவாதிக்க வைத்திருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். இந்நிலையில் வார இறுதி நாளில் வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைவரை வெளுத்துவிட்டிருக்கிறார்.

பிக் பாஸ் 10 வீட்டின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாதிகா தன் வேலையை சரியாக செய்யவில்லை. இதையடுத்து வினோத் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அது குறித்து விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து பிக் பாஸ் பற்றி அல்ல நிஜத்தில் தமிழகத்தில் நடப்பது குறித்து தான் என மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, விஜய் சேதுபதிக்கு தன் மனசுல பெரிய இவருனு நினைப்பு என விமர்சிக்கிறார்கள்.

லீடர், பழி: பிக் பாஸ் மேடையில் விஜய் சேதுபதி கூறியது இது தான். சாதிகாவை பார்த்து விஜய் சேதுபதி கூறியதாவது, லீடர் என்றால் என்னவென்றே தெரியாமல், லீடர்ஷிப் என்றால் என்னனு தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும், பொறுப்பும் வரும்போது எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, இல்லை தெறிச்சு ஓடுவது என்பது லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்று வேலை என்றார். அவர் பேசப் பேச சாதிகாவுக்கு முகம் மாறியது. ஆனால் அரங்கில் இருந்தவர்களோ கைதட்டி விஜய் சேதுபதியை பாராட்டினார்கள்.

விஜய் சேதுபதி என்னவோ சாதிகாவை தான் விளாசியிருக்கிறார். ஆனால் அவர் தற்போது ஆட்சியில் இருக்கும் தலைவரை தான் அப்படி குத்திக் காட்டி பேசியிருக்கிறார் என மக்கள் பேசுகிறார்கள். மக்களாக யூகித்து எதையாவது பேசினால் அதற்கு பிக் பாஸும், விஜய் சேதுபதியும் எப்படி பொறுப்பாக முடியும் என்கிறார்கள் மக்கள் செல்வனின் ரசிகர்கள்.

ஜோசப் விஜய்ணா முதல்வரான பிறகு எத்தனையோ பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இந்த விஜய் சேதுபதியோ அண்ணனை வாழ்த்தி ஒரு ட்வீட் கூட போடவில்லை. மேலும் நேரில் சந்திக்கவும் இல்லை. இந்த ஆளுக்கு போய் மாஸ்டர் படத்தில் அவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுத்தாரே விஜய்ணா என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

அப்போ கமல் , இப்போ… :பிக் பாஸ் மேடையில் முன்பு கமல் ஹாசன் பேசியபோது அவர் அரசியல் பேசுகிறார் என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் அவரின் அரசியல் கருத்துகளுக்காக வார இறுதிநாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர். இந்நிலையில் கமல் ஸ்டைலில் கிளம்பிவிட்டார் விஜய் சேதுபதி. உங்களிடம் இருந்து இது போன்று நிறைய எதிர்பார்க்கிறோம் மக்கள் செல்வனே என்கிறார்கள் ரசிகர்கள்.

முனியம்மா கருத்து: அடடடா, இந்த பிக் பாஸில் ஜனநாயக அறை வைத்தாலும் வைத்தார்கள் அரசியல் களம் சூடுபிடிக்கிறதே என்கிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் வீட்டின் விதிமுறைகளை வழக்கமாக பிக் பாஸ் தான் கொடுப்பார். ஆனால் இம்முறை உங்களை விதிமுறைகளை எழுதச் சொன்னது ஏன் தெரியுமா என ஹவுஸ்மேட்ஸிடம் விஜய் சேதுபதி கேட்ட ப்ரொமோ வீடியோ இன்று காலை வெளியானது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அந்த டோமாக்கரச்சி ரூம்லாம் எப்பொழுதும் வந்ததே இல்லை. இப்போது வந்திருக்கிறது என்றார் முனியம்மா. அதை கேட்ட விஜய் சேதுபதியோ என்ன ரூம், டெமாகிரஸியா என கேட்க ஆமாம் சார் என முனியம்மா விளக்கம் கொடுக்க, பார்வையாளர்கள் கை தட்டினார்கள். அதை பார்த்த விஜய் சேதுபதியோ, கை தட்டி அந்தம்மாவ கெடுக்காதீங்க என்றார். முதல் வாரத்தில் பார்வையாளர்களிடம் அதிகம் திட்டு வாங்கிய போட்டியாளராகிவிட்டார் முனியம்மா.

Source link