CSK – சஞ்சு சாம்சனுக்கு மாற்று: 2 வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே நிர்வாகம்: நல்ல முடிவு தானா? – chennai super kings selected 2 players for sanju samson replacement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன்ஸி பிரச்சினை வெடித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியில், கடந்த மூன்று சீசன்களிலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. மேலும், கடந்த சீசனில், ருதுராஜ் கெய்க்வாட்டின் ஸ்ட்ரைக் ரேட்டும் 123ஆக மட்டுமே இருந்தது.

இதனால், ஐபிஎல் 2027 சீசனில், தனக்கு ஒரு கேப்டன்ஸி வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என சஞ்சு சாம்சன் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், சிஎஸ்கேவில் இணைந்ததாகவும், தற்போது கேப்டன் பதவியை ஏற்க சரியான நேரம் வந்துவிட்டதாகவும் சாம்சன், சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளாராம்.

இப்படி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் மாறி மாறி, கேப்டன் பதவியை கேட்டு அடம்பிடித்த நிலையில், இரண்டு வீரர்களையும் ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் கழற்றிவிட சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் 2027 சீசனிலேயே சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக 2 வீரர்களை விளையாட வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏலத்தில், ஹேரி ப்ரூக்கை வாங்கி, அவரை ஓபனராக ஆட வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

மேலும், விக்கெட் கீப்பர் இடத்தில் கார்த்திக் சர்மாவை ஆட வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஐபிஎல் 2027 சீசனின் இரண்டாவது பாதியில் இருந்தே, கார்த்திக் சர்மாவை விக்கெட் கீப்பராக ஆட வைக்க உள்ளார்களாம். மேலும், ஹேரி ப்ரூக்கை ஏலத்தில் வாங்கி, அவரை துவக்கத்தில் இருந்தே ரெகுலராக ஓபனராக ஆட வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை, சாம்சன் ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்க விரும்பினால், அவரை அணியில் இருந்தும் விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

என்ன காரணம்? சாம்சனுக்கு தற்போது 31 வயதாகிறது. அடுத்த சீசனின்போது 32 வயதாகிவிடும். சிஎஸ்கேவை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடுத்து, இளம் வீரருக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, 19 வயது ஆயுஷ் மாத்ரேவை அடுத்த கேப்டனாக சிஎஸ்கே பார்க்கிறது. இவரை கேப்டனாக நியமித்தால், அடுத்த 10 -1 2 வருடங்களுக்கு கேப்டன்ஸி பிரச்சினை இருக்காது என்பதால்தான், சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றாக, சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வந்துள்ளது.

அதுமட்டுமல்ல, ஐபிஎல் 2027 சீசனின் முதல் சில போட்டிகளில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக சொதப்பினால், உடனே ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் வெளியேற ருதுராஜ் கெய்க்வாட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேமரூன் கிரீனை வெளியேற்றிவிட்டு, அந்த 25 கோடி தொகைக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேகேஆர் அணிக்கு, ஓபனர் இடத்திற்கு ஒரு இந்தியர் தேவைப்படுகிறார். மேலும், இந்தியர் ஒருவர் கேப்டனாக தேவைப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link